மாற்றுத் திறனாளிகளுக்கு கடனுதவி – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

0 635
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் சுயதொழில் செய்ய விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட 50 வயதுக்கு உட்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளும் வங்கிகடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்

இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் செய்ய விரும்பும் மாற்றுத் திறனாளிகள் 75,000 வரை வங்கி கடன் வழங்க வங்கிகள் பரிந்துரை செய்யப்படும். வங்கி மூலமாக விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு தங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அல்லது அதிகபட்சமாக 25,000 மானியமாக வழங்கப்படும்‌.

மாற்றுத்திறனாளிகள் திருச்சி கோர்ட்டு வளாகம் பின்புறம் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை நேரிலோ அல்லது http://trichirappalli.nic.in – Department of Differently Abled Persons என்ற இணையதளத்திலும் டவுன்லோட் செய்து உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 0431 – 2412590 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.

 

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8

Leave A Reply

Your email address will not be published.