எம். ஆர். பாளையம் காப்புக்காட்டில் தீத்தடுப்பு ஒத்திகை

0 294
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சணமங்கலம் ஊராட்சி எம் ஆர் பாளையத்தில் உள்ள காப்புக்காட்டில் சமயபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் மற்றும் வனத்துறையினர் சார்பில் ஆலோசனை கூட்டம் மற்றும் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

எம் ஆர் பாளையம் காப்புக்காட்டில் வனப்பகுதியில் எப்படி தீ விபத்து ஏற்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு விரைந்து தடுக்க முடியும் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை கூட்டம் மற்றும் தீ தடுப்பு ஒத்திகை சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தீயை விரைந்து கட்டுப்படுத்துவது குறித்து தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி நடத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.