மாநகராட்சி வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர் கே.என்.நேரு

0 263
Stalin trichy visit

நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு  திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 நிதியின் கீழ் 1 சிறிய ரக சாலை சுத்தம் செய்யும் வாகனம், 15 வது நிதிக்குழு நிதியின் கீழ் 4 மழை நீர் வடிகால் தூர் வாரும் வாகனங்கள், 5 சிறிய ரக புதை வடிகால் அடைப்பு நீக்கும் வாகனங்கள் என மொத்தம் ரூபாய் 3.65 கோடி மதிப்பிலான 10 வாகனங்களை மாநகராட்சியின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து இன்று  தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார்,  மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின் குமார், நகரப்பொறியாளர் சிவபாதம், மாநகராட்சி அலுவலர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.