பேக்கரி இயந்திரம் வாங்கி தருவதாக கூறி ரூ.70 ஆயிரம் மோசடி செய்தவர் கைது

0 180
Stalin trichy visit

திருச்சி ஆக1 – திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கண்ணுடையான் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிக்கந்தர் பாஷா (வயது 39) இவர் சென்னையில் உள்ள ஒரு பேக்கரி கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் அவருடைய வாட்ஸ் அப் குழுவில் திருச்சி கம்பரசம்பேட்டை சேர்ந்த ஒரு வாலிபர் அறிமுகமாகிறார். தற்சமயம் அவர் உறையூரில் தங்கி உள்ள அவர் தனக்கு பேக்கரி விஷயங்கள் தொடர்பாக எல்லாம் தெரியும் என்றும் , பேக்கரி இயந்திரம் வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி சிக்கந்தர் பாஷாவிடம் ரூபாய் 70 ஆயிரம் பணத்தை ஜிபே மூலம் பெற்றுக் கொண்டார்.

பிறகு சிறிது நாட்களில் எந்திரத்தையும் வாங்கி தரவில்லை பணத்தையும் திருப்பி தரவில்லை. இதைத்தொடர்ந்து சிக்கந்தர் பாஷா தன்னை அவர் ஏமாற்றி விட்டதாக உறையூர் குற்றப் பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஷேக் முகமது கைது செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.