குடிபோதையில் மாணவர்கள் உட்பட 4 பேரை அரிவாளால் தாக்கியவர் கைது
திருச்சி திருவெறும்பூர் அருகே குடிபோதையில் மாணவர்கள் உட்பட 4 பேரை அரிவாளால் வெட்டிய நொங்கு வியாபாரியை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து துவாக்குடி காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவெறும்பூர் அருகே துவாக்குடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சீமான் இவரது மகன் லோகேஸ்வரன் (18) இவர் பெல் வளாகத்தில் உள்ள பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வாழவந்தான் கோட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது குடிபோதையில் துவாக்குடி அருகே உள்ள கீழ மாகாணத்தைச் சேர்ந்த சின்னதுரை மகன் நொங்கு வியாபாரியான வினோத் (25)குடிபோதையில் வந்து உள்ளார் அப்படி வந்தவர் லோகேஸ்வரனிடம் தகராறு செய்ததோடு தான் வைத்திருந்த அறிவாலால் லோகேஸ்வரனை வெட்டியுள்ளார்.
அதை பார்த்த வாழவந்தான் கோட்டை புது பர்மா காலனியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சதீஷ்குமார் (17) இவர் திருவெறும்பூர் அரசு ஐடிஐ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வினோத்திற்கும் யோகேஸ்வரனுக்கு நடந்த சண்டையை விலக்கச் சென்றுள்ளார். அப்பொழுது வினோத் சதீஷ்குமாரை தாக்கியுள்ளார்.
இதனை பார்த்த வாழவந்தான் கோட்டை புது பர்மா காலனியை சேர்ந்த உதயசூரியகுமார்(42) என்பவர் சண்டையை விளக்க சென்றபொழுது அவரையும் வினோத் அரிவாளால் வெட்டியுள்ளார். அதேபோல் சந்தோஷ் என்பவரையும் அரிவாளால் வெட்டியுள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் வினோத்தை பிடித்து தர்ம அடி கொடுத்து துவாக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பொதுமக்கள் தாக்கியதில் வினோத்தின் மண்டை உடைந்தது. இந்த நிலையில் வினாத்தாள் வெட்டுப்பட்ட லோகேஸ்வரன், உதயசூரியகுமார் ஆகியோர் துவாக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சதீஷும், சந்தோசம் முதல் கட்ட சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். பொதுமக்கள் தாக்கியதில் மண்டை உடைந்த வினோத்தும் துவாக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் துவாக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.