கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி அரசு பள்ளி மாணவன் பலி
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் கொள்ளிடம் ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற அரசு பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலியானார்.
மண்ணச்சநல்லூர் புதுக்காலனி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் செல்வி தம்பதியின் மகன் சுதர்சன் (வயது 18) இவர் மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். பொதுத்தேர்வு நடைப்பெற்று வரும் நிலையில் தேர்விற்க்காக விடுமுறை அளித்துள்ளனர்
இந்நிலையில் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றனர்.அப்போது சுதர்சன் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென ஆழமான பகுதிக்கு சென்று புதை மணலில் மாட்டிக் கொண்டார். அப்போது எதிர்நீச்சல் அடித்து மேலே வர முயன்ற அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை கண்ட சக நண்பர்கள் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர் மற்றும் மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் மூழ்கிய மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒருமணி நேர தேடுதல் போராட்டத்திற்கு பிறகு மாணவன் சுதர்சன் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் மணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு மாணவனை கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றிய மண்ணச்சநல்லூர் போலீசார் உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.