போதை மீட்பு மையத்தில் தொழிலாளி தற்கொலை

0 113
Stalin trichy visit

திருச்சி ஆக.21 திருச்சி புங்கனூர் சாய் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. (வயது 55). மதுவுக்கு அடிமையானவர். இவரை போதை பழக்கத்தில் இருந்து மீட்டெடுப்பதற்காக அவரது உறவினர்கள் எடமலைப்பட்டி புதூர் காவிரி நகர் போதை மீட்பு மையத்தில் சேர்த்தனர்.
இந்த நிலையில் அண்ணாதுரை யாரும் எதிர்பாராத வகையில் அந்த போதை மீட்பு மையத்தின் ஜன்னலில் தனது வேட்டியில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.

இதுகுறித்து அவரது மகன் சரவணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் எடமலைப்பட்டி புதூர் இன்ஸ்பெக்டர் செந்தில் மாறன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.