போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்றவர் கைது
திருச்சி, ஆக 11 சிவகங்கை மாவட்டம் இளங்குடியைச் சேர்ந்தவர் அலி அக்பர் (58 ) .இவர் மலேசியா செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். அங்கு இமிகிரேஷன் அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து பிறந்த தேதி, பிறந்த ஊர் ,தாய் மற்றும் தந்தை பெயர் மற்றும் முகவரி ஆகியவற்றை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரிந்தது இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து அலி அக்பரை கைது செய்து சிறையில் அடைத்தனர்