இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 இணையர்களுக்கு திருமணம்
திருச்சி, ஜூலை 7 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் திருமண மண்டபத்தில் 10 இணையர்களுக்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருமணம் நடத்தி வைத்து, மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை கொடுத்து வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் கதிரவன், தியாகராஜன், ஸ்டாலின் குமார், அரசு உயரதிகாரிகள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.