நெல் வயலில் இயந்திரம் மூலம் களை எடுக்கும் பணி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 281
Stalin trichy visit

திருச்சி, நவ.18 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் சம்பா சாகுபடி பயிரிட்ட வயலில் இயந்திரம் மூலம் களை எடுக்கும் நெல் வயலை பார்வையிட்டார். மேலும் மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வரப்பு பயிராக வரப்பு ஓரங்களில் உளுந்து விதைப்பு செய்ய பயனாளி கண்ணனுக்கு உளுந்து விதையை 50% மானியத்தில் வழங்கி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மாதவபெருமாள்கோயில் கிராமத்தில் முன்னோடி விவசாயி விஸ்வநாதன் ஒரே இடத்தில் நெல் நேரடி விதைப்பு, நெல் சாதாரண முறையில் நடவு, நெல் வரிசை நடவு, நெல் இயந்திர நடவுக்கான பாய் நாற்றங்கால் ஆய்வையை பார்வையிட்டார். இந்நிகழ்வில் வேளாண்மை இணை இயக்குநர் முருகேசன், வேளாண்மை துணை இயக்குநர் ( நேர்முக உதவியாளர் ) மல்லிகா, மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயராணி, மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர், மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் சக்தி வேல்முருகன், வேளாண்மை அலுவலர் ஐஸ்வர்யா, வேளாண்மை உதவி அலுவலர்கள் பார்த்திபன், பாஸ்கர், ஆனந்த், பயிர் அறுவடை பரிசோதனை உதவியாளர் பழனி ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.