வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
திருச்சி, நவ.18 திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் செயலாக்கம் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, ஊரக வளர்ச்சித்திட்ட இயக்குநர் தேவநாதன், மாநகர காவல் துணை ஆணையர் ஸ்ரீதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.