மணப்பாறையில் அதிமுக கழக செயல்வீரர்கள் கூட்டம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை தெற்கு மாவட்ட பகுதிகளில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் மணப்பாறை
வையம்பட்டி ஒன்றிய பகுதிகளில் வடக்கு ஒன்றியம் தெற்கு ஒன்றியம் பகுதிகளில் செயல்வீரர்கள் செயல் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது
இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் PVK. பழனிச்சாமி தலைமையிலும் தெற்கு ஒன்றிய செயலாளர் .சேது தலைமையிலும் T. ரெத்தினவேல், கழக அமைப்புச் செயலாளரும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் இருவரும் மணப்பாறை வையம்பட்டி ஒன்றிய பகுதிகளில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்
இதில் கழக அமைப்புச் செயலாளர் டி ரத்தினவேல் பேசுகையில் தி.மு.க அரசு செய்த சாதனைகள் ஒன்றும் மக்கள் மனதில் எடுக்கவில்லை பொய்யான ஆட்சி சொல்லியே அமர்ந்துள்ளனர் மக்கள் எப்பொழுது தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கின்றார்.
நமது புரட்சித் தமிழர் எடப்பாடி விவசாயிகளின் கவலைகளைப் போக்கியவர் புரட்சித்தமிழர் எடப்பாடி நாலரை ஆண்டுகளில் நல்லாட்சி கொடுத்தவர் மக்களின் சுமைகளை தாங்கிக் கொண்டு நல்லாட்சி புரிந்து பல்வேறு பல்நோக்கு திட்டங்களை வகுத்து தந்தவர்
நாம் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெறவில்லை என்றாலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் விடியா திமுக அரசை ஓட விரட்டி மீண்டும் நமது எடப்பாடியார்
நல்ல ஒரு மக்களாட்சி கொண்டு மக்களை சுமைகளை தாங்கும் அரசாக செயல்படுவார் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுங்கள் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
இக்கூட்டத்தில். முன்னால் சட்ட மன்ற உறுப்பினர்கள் மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் .
R.சந்திரசேகர் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் செ.சின்னச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசணைகள் வழங்கினார்கள்.