அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு விருது வழங்கும் விழா
திருச்சி, அக். 14 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருப்பைஞ்ஞீலியில் அக்னிச்சிறகுகள் நண்பர்கள் குழு சார்பாக முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபி ஜே அப்துல் கலாம் பிறந்த நாள் விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
திருப்பைஞ்ஞீலி கிராமத்தை சேர்ந்த பொறியியல் மாணவர்களுக்கும், 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஜீயபுரம் டி.எஸ்.பி பாலச்சந்தர், லால்குடி டி.எஸ்.பி தினேஷ் குமார், மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் ரகுராமன், சமயபுரம் காவல் ஆய்வாளர் தயாளன் ஆகியோர் விருது வழங்கி சிறப்பித்தனர். இந்நிகழ்வில் இளைஞர் அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.