முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்த மாமன்ற உறுப்பினர் செந்தில்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் ஆற்றிய உரையில் நேற்றைய தினம் திருச்சி திருவெறும்பூர் தொகுதியும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 38-வது வார்டுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்”வானவில் மன்றம்”துவக்கி வைத்தார்கள், மக்களைப் பற்றி அனுதினமும் சிந்தித்து அவர்களின் வாழ்வில் ஏற்றம் பெற அரும்பாடுபட்டு உழைக்கும் மக்கள் போற்றும் மாமன்னர்,தன்னிகரற்ற தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியையும், இத்தகைய நிகழ்ச்சியினை திருவெறும்பூர் தொகுதி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 38-வது வார்டில் ஏற்பாடு செய்யப்பட்டமைக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாமன்றத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் சார்பாகவும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் , 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் என்ற முறையில் தெரிவித்து மகிழ்கிறேன்.