மகாத்மா காந்தியின் 154 வது பிறந்த விழாவை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபொதுமக்கள்
திருச்சி கணபதி நகர் கிழக்கு விஸ்தரிப்பு பொதுமக்கள் சார்பில் மகாத்மா காந்தியின் 154 வது பிறந்த விழாவை முன்னிட்டு காந்தியின் திருஉருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .நமது இந்திய சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட நமது ‘தேசத் தந்தை’ மகாத்மா காந்தி பிறந்த தினத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ஆம் தேதியை ‘காந்தி ஜெயந்தி’ ஆக கொண்டாடினர்.மகாத்மா காந்தி சத்திய சோதனை நூலினை பொதுமக்கள் படிப்பதற்கும் வைத்திருந்தனர்.தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் அவரது தியாகங்களைப் போற்றி, அவர்தம் நல்ல நோக்கங்கள் நிறைவேற அனைவரும் நேர்மை, அஹிம்சை பாதையைக் கடைபிடித்து நாட்டிற்கும் உலகின் முன்னேற்றத்திற்கும் பணியாற்ற உறுதியேற்றனர்.அருள் ஜோசப், தனபந்த ராஜ், சுரேஷ் ஆழ்வார், சண்முகம், கோபால், கணேசன், அன்பு, பன்னீர், தங்கவேல், ராமசாமி, பாப்பாத்தி, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்