“நம்ம திருச்சி சந்தை”-ஸ்ரீரங்கம் தேவி மாநகராட்சி பள்ளியில் விற்பனை தொடங்கியது..

0 482
Stalin trichy visit

வேளாண்மை விளை பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளையும் ரசாயனம் இல்லாத உணவு தானியங்களை வாங்க விரும்பும் நுகர்வோரையும் இணைக்கும் பாலமாக திருச்சி க்ரியா அறக்கட்டளை, தண்ணீர் அமைப்பு பசுமை சிகரம் அகத்தியர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பாக திருச்சி  ஸ்ரீரங்கம் மாநகராட்சி பள்ளி வளாக அரங்கில் “நம்ம திருச்சி சந்தை” ஸ்ரீரங்கம் தேவி மாநகராட்சி பள்ளியில் விற்பனை தொடங்கியது.

இவ்விழாவில் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் வேளாண்மை மற்றும் சார்பு துறை வல்லுநர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் முன்னோடி விவசாயிகள் மற்றும் உழவர் பெருமக்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள். வருகை கரும் அனைவருக்கும் இலவச சித்தா, மற்றும் இயற்கை மருத்தவ பரிசோதனை  செய்யப்பட்டுள்ளது.

நிகழ்வில் விதைகள் யோகநாதன், க்ரியா அறக்கட்டளை முனைவர் சிவபாலன், தண்ணீர் அமைப்பின் செயலாளர் பேராசிரியர் கி.சதீஷ்குமார், நிர்வாகக்குழு R.K.ராஜா உள்ளிட்ட விவசாயிகள், பொதுமக்கள் வருகை தந்து விற்பனையை தொடங்கி வைத்தனர்.
இனி மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை ஸ்ரீரங்கம் தேவி மாநகராட்சி பள்ளியில் நம்ம திருச்சி சந்தை நடைபெறும்.

Leave A Reply

Your email address will not be published.