மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் சென்னை மார்க்கமாக சென்ற ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புள்ளம்பாடி அருகே கல்லக்குடியில் உள்ள அம்பாள் டாக்கீஸ் தெருவை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் 37 வயதான ராஜா. இவருடைய தாய் தந்தை இருவரும் காலமாகிவிட்டனர்.இவருக்கு சொந்த வீடு ஏதும் இல்லாத நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு ஊர் ஊராக சுற்றித் திரிந்து கொண்டுள்ளார். இந்நிலையில் கல்லக்குடியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும் போது சென்னை மார்க்கமாக சென்ற அடையாளம் தெரியாத ரயில் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த விருத்தாச்சலம் ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளர் சின்னப்பன் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.