திருச்சியி்ல் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா..! அமைச்சர் மகேஷ் பங்கேற்பு…

மார்ச். 27. திருச்சி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 ஆவது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் பல இடங்களில் தி.மு.க கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்,
திருச்சி தெற்கு மாவட்ட பொறியாளர் அணி சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் மாபெரும் இறகு பந்து இரட்டையர் தொடர் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் 3 வது மண்டல தலைவர் மு.மதிவாணன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களை பாராட்டி பரிசு மற்றும் பதக்கம் அணிவித்து கௌரவித்தனர்.