நூலக தின விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ்
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலக கூட்ட அரங்கில் நூலக தின விழாவில் கலந்து கொண்டு சிறப்பாக செயலாற்றிய திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நூலகர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவித்தார். இந்நிகழ்வில் துணை மேயர் திருமதி.திவ்யா, மண்டல குழு தலைவர் திரு.மதிவாணன், மாவட்ட நூலக அலுவலர் திரு.அ.பொ.சிவக்குமார், வாசகர் வட்டத் தலைவர் திரு.வீ.கோவிந்தசாமி ஆகியோரும் வாசகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
மாண்புமிகு அமைச்சர் உரையின்போது நூலகம் என்பது வாசிப்பின் மையமாக மட்டும் இருப்பதில்லை. அது ஒற்றுமையின் மையமாகவும் இருக்கின்றது. ஏனென்றால் அங்கே தமிழ் இருக்கின்றது என்று கூறினார்.
