பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு தயாரிக்கும் இடம் : அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு

0 286
Stalin trichy visit

திருச்சி அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மாண்புமிகு முதல்வர் அவர்களின் காலை சிற்றுண்டி திட்டத்திற்கான உணவு தயாரிக்கும் இடத்தை மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  பார்வையிட்டு ஆய்வு செய்தார். இம்மையத்தில் இருந்து 40 பள்ளிகளில் பயிலும் 2728 மாணவச் செல்வங்களுக்கு காலை சிற்றுண்டி தயாரிக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் துணை மேயர் திவ்யா, கோட்ட தலைவர்கள் மு.மதிவாணன், ஜெயநிர்மலா நகராட்சி ஆணையர் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
பள்ளிமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சமூக நலத்துறையின் மான்ய கோரிக்கையின் போது, அரசு பள்ளி வகுப்பு எண். 1 முதல் வகுப்பு எண். 5 வரை பயன்பெறும் வகையில் மாணவ , மாணவியர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் சிறப்புத் திட்டத்தினை அறிவித்துள்ளார். மேற்படி திட்டமானது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 15.09.2022ல் துவக்கி வைக்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 40 அரசு பள்ளிகளில் வகுப்பு எண். 1 முதல் வகுப்பு எண். 5 வரை பயலும் 2928 மாணவ, மாணவிகளுக்கு காலைச் சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தினை செயல்படுத்துவதற்கு அரசு சையது முர்துஷா மேல்நிலை பள்ளியில் ஒருங்கிணைந்த சமையற்கூடம் ரூ.129.00 இலட்சம் மதிப்பீட்டில் நவீன உபகரணங்கள் கொண்ட சமயல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சமையற் கூடத்தில் சமயல் செய்து மற்ற பள்ளிகளுக்குச் எடுத்துச் செல்ல வசதியாக தினமும் காலையில் இங்கு அரசு வழிகாட்டி நெறிமுறைப்படி சிற்றுண்டி தயாரிக்கப்பட்டு வாகனங்கள் முலம் அந்தந்த பள்ளிக்கு கொண்டு சென்று மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும்.
மேலும், அனைத்து பள்ளி வேலை நாட்களில் வகுப்பு 1 முதல் 5 வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வார நாட்களில் காலை சிற்றுண்டி வகைகளான உப்புமா, பொங்கல் மற்றும் கிச்சடி வகைகள் , காய்கறிகள் சாம்பார் முறையே வழங்கப்படும்.


மனண்புமிகு அமைச்சர் அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது
மாண்புமிகு முதல்வர் அவர்களின் வாழ்நாள் சாதனையாக பொன்னான கனவுத் திட்டமான இந்த திட்டத்தை அரசு அதிகாரிகள் மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் துணையோடு இந்தத் திட்டத்தை வெற்றி கரமாக நடத்திடுவோம் என கூறினார்

Leave A Reply

Your email address will not be published.