மாற்றுத்திறனாளிக்கு ஸ்கூட்டர் வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
மாற்றுத்திறனாளி ஸ்கூட்டர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்
திருச்சி, நவ.5 திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி. தொழில்நுட்ப பயிலரங்கில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரை வழங்கினார். வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், வேலை வாய்ப்பு பயிற்சித்துறை இயக்குநர் வீரராகராவ், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர் செந்தில்குமார், மண்டல இணை இயக்குநர் சந்திரன், துணை இயக்குநர் மகாராணி, துணைமேயர் திவ்யா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், மண்டல தலைவர் மதிவாணன், மாமன்ற உறுப்பினர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள்,அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.