அரசுப்பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இணைப்பு : அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

0 300
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 31  திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது தொகுதிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளான திருவெறும்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 39 வது வார்டு எல்லைக்குடி மற்றும் திருச்சி மாநகராட்சி 36-வது வார்டுக்கு உட்பட்ட ரயில் நகர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் தனது சொந்த நிதி ரூ.2. 50 லட்சம் மதிப்பீட்டில் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் அவர்களின் தாகம் தீர்க்கும் நோக்கத்தோடு புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இணைப்பினை பள்ளி மாணவ மாணவிகளுக்கு பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்‌

மேலும் குடிநீர் இணைப்பினை திறந்து வைத்ததுடன் அதனை ஆய்வு செய்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்

இந்நிகழ்வில் மண்டலம் மூன்றின் தலைவர் மு.மதிவாணன், திருச்சி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் திருவெறும்பூர் வட்டார கல்வி அலுவலர் பெஞ்சமின் ஜகரா பர்வீன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் நீலமேகம், சிவகுமார்,
கே. கே. கே.கார்த்திக் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.