கல்லணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்தார் அமைச்சர் கே.என்.நேரு

0 240
Stalin trichy visit

தஞ்சை, ஜுன் 16 குறுவை சாகுபடிக்காக கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்தார் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு. இதில் தஞ்சை திருவாரூர் நாகை மயிலாடுதுறை திருச்சி மாவட்ட ஆட்சியர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவசாய பிரதிநிதிகள் பங்கேற்பு.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை கடந்த ஜூன் 12 தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தார். டெல்டா மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்பட்ட நிலையில் தஞ்சை மாவட்டம் கல்லணையை தண்ணீர் நேற்று இரவு வந்தடைந்தது. இதனை அடுத்து தற்போது கல்லணையிலிருந்து காவிரி வெண்ணாறு கல்லணை கால்வாய் கொள்ளிடம் ஆறுகளில் பாசனத்திற்காக திறப்பு.
இதன் மூலம் குருவை சாகுபடி தஞ்சை மாவட்டத்தில் 1, 08, 951 ஏக்கர் திருவாரூர் 92214 ஏக்கர் நாகை 22805 ஏக்கர் மயிலாடுதுறை 93750 ஏக்கர் கடலூர் 24976 ஏக்கர் என 3, 42, 696 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு.
கல்லணையில் இருந்து முதல் கட்டமாக காவிரியில் 500 கன அடி 500 கன அடி கல்லணை கால்வாயில் 100 கொள்ளிடத்தில் 500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு. படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும். என தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.