குளித்தலையில் அருண்நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு வாக்குசேகரிப்பு
கரூர், ஏப். 9 பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை கிழக்கு, மேற்கு ஒன்றியம், குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கே.என். அருண்நேருவை ஆதரித்து நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு குளித்தலையில் தெருத் தெருவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், ஒன்றிய அரசிற்கு அளிக்கும் வரி பணம் ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா நமக்கு அளிக்கிறது,, ஆனால் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு ரூபாய் அளித்தால் இரண்டு ரூபாய் 12 பைசாக்கள் அளிக்கின்றனர், ஆனால் அப்பகுதியில் உள்ளவர்கள் வேலை வாய்ப்பை தேடி நம் தமிழ் நாட்டிற்கு வருகின்றனர். ஆனால் அவர்களின் பணம் எங்கு என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. தமிழ்நாடு அரசு ஒன்னேகால் கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம், இலவச பஸ் பயணம், கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று கூறினார்.
பிரச்சாரத்தில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், குளித்தலை ஒன்றிய செயலாளர்கள் சந்திரன், தியாகராஜன் மற்றும் குளித்தலை நகர் மன்ற தலைவர் சகோதரர் பல்லவி ராஜா மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பல்லவி ராஜா மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.