சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் கே.என்.நேரு

0 305
Stalin trichy visit

திருச்சி, ஜன.6 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஸ்ரீதனலட்சுமி மகாலில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் தாய்சேய் நலனை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு, மஞ்சள், குங்குமம், பூ, மரம் மற்றும் பொன்னான ஆயிரம் நாட்கள் குறித்த மடிப்பேடு அடங்கிய பொருட்கள் வழங்கி மலர் தூவி வாழ்த்தினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், தியாகராஜன், பழனியாண்டி, கதிரவன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், மண்ணச்சநல்லூர் ஒன்றியக்குழு தலைவர் ஸ்ரீதர், மாவட்ட திட்ட அலுவலர் (ஒ.கு.வ.தி) ரேணுகா, மாவட்ட சமூகநல அலுவலர் நித்யா, பேரூராட்சித் தலைவர்கள் சிவசண்முககுமார், சரவணன், மண்ணச்சநல்லூர் வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் பிரபாவதி, வட்டாரமருத்துவ அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.