தோட்டத்தில் கள்ள சாராயம் காய்ச்சியவர் கைது
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள சிலுவைப்பட்டி கிராமத்தில் தனது சொந்த தோட்டத்தில் கள்ளச் சாராயம் காய்சியவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
புள்ளம்பாடி அருகே சிலுவைப்பட்டி கிராமத்தில் ஒரு தோட்டத்தில் கள்ளசாராயம் காய்ச்சுவதாக திருவெறும்பூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த திருவெறும்பூர் மதுவிலக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு ஒரு தோட்டத்தில் கள்ளசாராயம் காய்ச்சி கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் சிலுவைப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் 42 வயதான மூக்கன் என்கின்ற எட்வின் செல்வகுமார் தனது சொந்தத் தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்தது என தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த திருவெறும்பூர் மதுவிலக்கு போலீசார் அவரை கைது செய்து லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி லால்குடி கிளை சிறைச்சாலையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயம், பேரல், ஐ.டி.அரக் மற்றும் அடுப்புகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.