திருச்சி அரசு மருத்துவமனையில் பல்வேறு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

0 334
Stalin trichy visit

திருச்சி,ஏப்.4 திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூபாய் 29 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மின் தூக்கி, ரூ. 47 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திரவ பிராணவாயு கொள்கலன் மற்றும் ரூபாய் 1.23 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி நோய் எதிர்ப்பு குருதி பகுப்பாய்வு இயந்திரங்களை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று (04.04.2023) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் இரா.வைத்திநாதன், இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், மாவட்ட ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன், முக்கிய பிரமுகர் வைரமணி, மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை முதல்வர் மரு.டி.நேரு, மருத்துவ கண்காணிப்பாளர் மரு.இ.அருண்ராஜ்மற்றும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.