தியாகி இம்மானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

0 479
Stalin trichy visit

தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாள்- அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை.

விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இம்மானுவேல் சேகரன்  66-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சாஸ்திரி சாலையில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் திமுக கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் இம்மானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது…

இந்நிகழ்வில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள்,பகுதி செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இம்மானுவேல் சேகரன் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்..

Leave A Reply

Your email address will not be published.