மாட்டுவண்டியில் ஏறி விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார் வேட்பாளர் அருண்நேரு
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அருண் நேரு குளித்தலையில் உள்ள தோகமலை கிழக்கு ஒன்றியத்தில் முதலைப்பட்டி கிராமத்தில் மாட்டு வண்டியில் ஏறி விவசாயிகளிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
அருகில் உடன் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமர், ஒன்றிய செயலாளர் சந்திரன் அண்ணாதுரை உள்ளிட்ட கழக தோழர்கள் கூட்டணிகட்சி நிர்வாகிகள் பலர் சென்றனர்