திருப்பட்டூர் கோயில் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

0 285
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், ்சிறுகனூர் அருகே திருப்பட்டூர் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்

பாலிவுட்டுக்கு செல்லும் முன் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் மற்றும் உப கோவில்களில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் சாமி தரிசனம் செய்தனர் அதற்கு பின்பு நடைபெற்ற ஆய்வின் போது அப்பகுதியில் உள்ள கைலாசநாதர் திருக்கோயில் 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கோயில் திருப்பணிகளை தொல்லியத்துறை ஒப்புதலுடன் நடத்திடவும், அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோவில் திருப்பணிகளையும் விரைந்து முடிக்கவும் கோவில் வளாகத்தில் ரூபாய் 46 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் புதிய அன்னதான கூடத்தினை விரைந்து முடித்து பக்தர்கள் பயன்படும் வகையில் செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார் .

இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் எம்எல்ஏ கதிரவன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.