துவாக்குடி அரசு மேல்நிலை பள்ளியில் எந்திரவியல் ஆய்வகம் : அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
திருச்சி, டிச.19 திருச்சி, துவாக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள எந்திரவியல் ஆய்வகத்தை நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று திறந்து வைத்து கையேடுகளை வெளியிட்டு எந்திரவில் ஆய்வங்களின் செயல்பாடுகளை பார்வையிட்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்கள். இந்நிகழ்வில் மாநில திட்ட இயக்குநர் எம்.ஆர்த்தி, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநர் நரேஸ், இணை இயக்குநர் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் தானுமூர்த்தி, துவாக்குடி நகர்மன்ற தலைவர் காயாம்பு, முதன்மை கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணப்பிரியா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.