ஜீவா வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு விருது வழங்கும் விழா
திருச்சி, ஜன 23 திருச்சி மாவட்டம், மணப்பாறை விராலிமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் இலக்கிய பேராசான் ஜீவா அறுபதாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜீவா வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு ஜீவா விருது விழா கலை நிகழ்ச்சியுடன் நடைபெற்றது
இவ் விழாவிற்கு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட தலைவர் தங்கமணி தலைமை வகித்தார் ஜான் பீட்டர் பசீர் சந்திரமோகன் சேவியர் மதி சங்கரலிங்கம் ராதாகிருஷ்ணன் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் எழுத்தாளர் ஆய்வாளர் கவிஞர் ஜீவபாரதிக்கு இஸ்கப் மாநில தலைவர் சௌமியா ராஜரத்தினம் ஜீவா விருதினை வழங்கி உரை நிகழ்த்தினார்
கவிஞர் இந்திரஜித் உரைநடை கவிதையில் எழுதிய ஜீவா வாழ்க்கை வரலாறு நூலை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில செயலாளர் டாக்டர் தா.அறம் வெளியிட்டு உரை நிகழ்த்தினார்