திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் மாநகராட்சி 40வது வார்டு குட்பட்ட பகவதிபுரம் கணபதி நகரை சேர்ந்தவர் பால்ராஜ்(வயது 49), இவரது மகன் ஜோன்ஸ் (வயது 35), இவர் சௌமியா(வயது 22) என்ற பெண்ணை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டு தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சவுமியாவிற்கு குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த சில மாதங்களாக ஜோன்ஸ்க்கும்,
அவரது மனைவி சௌமியாவிறகும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சௌமியாவை அவரது மாமியார் கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. சௌமியா இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமியிடம் புகார் அளித்தார். மேலும் இந்த புகார் மனுவை விசாரித்த டி.எஸ்.பி. சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் ஜோன்ஸின் தாயார் ஜெரிட்டா(வயது 46) என்பவரை கைது செய்து அவர் மேல் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.