மேல கல்கண்டார் கோட்டையில் 2 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை

0 126
Stalin trichy visit

திருச்சி டிச.18 திருச்சி மேலகல்கண்டார் கோட்டை இந்திரா காந்தி நகர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வ பிரபு. இவரது மனைவி தமிழ் பிரியா (வயது 32). இந்த தம்பதிகளுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
தமிழ் பிரியா அறுவை சிகிச்சை மூலம் இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்தார் . இதனால் அவருக்கு சிறு சிறு உடல் நலப் பாதிப்புகள் ஏற்பட்டு வந்தன. இதனால் அவர் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளானார்.  இந்நிலையில் வழக்கம் போல் செல்வ பிரபு பெயிண்டிங் வேலைக்கு சென்றார் . பின்னர் மாலை வீடு திரும்பிய போது மனைவி தமிழ் பிரியா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பது பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் இது பற்றி பொன்மலை போலீசில் புகார் செய்யப்பட்டது . தமிழ் பிரியாவின் சகோதரர் வீராசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.