7 வயது சிறுமியை மறந்து வீடு திரும்பிய தாய்; தவித்த சிறுமியிடம் கொலுசு திருட முயன்ற மூதாட்டி

0 449
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் கொண்டையம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பத்மநாதன். இவரது மனைவி சுதா(வயது 33). இத்தம்பதிக்கு 7 வயதில் தர்ஷிகா ஸ்ரீ என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று தனது மகளை அழைத்துக் கொண்டு நடுகொணையம்பேட்டையில் உள்ள மளிகை கடைக்கு சுதா சென்றுள்ளார். மளிகை பொருட்களை வாங்கி விட்டு, தனது மகளை மறந்த நிலையில் அவர் வீடு திரும்பி உள்ளார்.

அப்போது மகளை மளிகை கடையிலேயே விட்டு விட்டு வந்ததை உணர்ந்த அவர் திரும்பவும் மகளை தேடி கடைக்கு சென்றுள்ளார். அந்த வேளையில் சிறுமியை மறைவான இடத்தில் முன்பின் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், சிறுமி தர்ஷிகாஸ்ரீயை மறைவான இடத்திற்கு அழைத்து சென்று காலில் உள்ள கொலுசுவை கழற்ற முயன்று கொண்டிருந்தார்.

அதைப்பார்த்து சுதா சத்தமிட்டு உள்ளார். இதன் காரணமாக மூதாட்டி அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசிசார் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு அந்த மூதாட்டியை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.