திருச்சி மாவட்டம் குணசீலம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் ஊராட்சி வரவு, செலவு விபரம் அச்சிடப்பட்டு பொதுமக்களிடம் வழங்கப்பட்ட நிகழ்வு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் குருநாதன் தலைமை வகித்தார். துணை தலைவர் ரெத்தினவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் குணசீலம் ஊராட்சியில் மேற்கொள்ளபட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள், வரவு, செலவீனங்கள் ககுறித்து
விவாதித்கபட்டது.

அப்போது ஊராட்சி தலைவர் குருநாதன் குணசீலம் ஊராட்சி வரவு செலவு விபரங்களை பொதுமக்களிடம் தனித்தனியே வழங்கினார். பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தி பேசினர். அப்போது ஊராட்சி தலைவர் குருநாதன் 16 லட்சம் மதிப்பில் காவிரி ஆற்றில் போர் வெல் அமைத்தல், 6 லட்சம் மதிப்பில் குடிநீர் தொட்டி அமைத்தல், பைப் லைன் அமைத்தல், தெரு விளக்கு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது என தெரிவித்தார். ஊராட்சி உறுப்பினர்கள், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.