நகராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு கூட்டம்…
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு கூட்டம்
நகராட்சி தலைவர் கீதா.ஆ மைக்கேல்ராஜ் தலைமையில் நகராட்சி மன்ற கூட்டரங்கில் நடைப்பெற்றது.
நகராட்சி ஆணையாளர் சியாமளா முன்னிலை வகித்தார். மாவட்ட குழந்தை நலக் குழு உறுப்பினர் முனைவர் பிரபு குழந்தை திருமண தடுப்புச் சட்டம், குழந்தை நலக்குழுவின் பணிகள், செயல்பாடுகள் மற்றும் நகராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுவில் உறுப்பினர்களின் பங்கு குறித்து பேசினார்.
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சமூக பணியாளர் பிரியதர்ஷினி குழந்தை பாதுகாப்பு குழுவின் நோக்கம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், சட்ட விரோதமாக குழந்தைகளை தத்து எடுத்தல் குறித்தும்,வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுகந்தி வளர் இளம் பருவ பெண் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அவசியம், இரும்புச்சத்து நிறைந்த ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருள்கள் குறித்தும், மணப்பாறை நகர்ப்புற சுகாதார நிலைய மருத்துவர் ரிஸ்வானா பர்வீன் குழந்தை திருமணத்தால், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு கர்ப்பம் தரித்த குழந்தைகள் உடல் அளவில், மன அளவில் ஏற்படும் பிரச்சனைகள், தாய் சேய் இறப்பு குறித்து பேசினார்கள். மணப்பாறை காவல் நிலைய குழந்தை நல காவல் அலுவலர் ராஜகோபால் மற்றும் நகராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குழந்தைகள் மீதான வன்முறை குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
