10ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் 4 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

0 359
Stalin trichy visit

திருச்சி திருவெறும்பூரில் தொகுதிக்கு உட்பட்ட 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் 4 ஆயிரம் பேரூக்கு அன்பில் அறகட்டளை சார்பில் கல்வி உபகரணங்களை தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அன்பில் அறக்கட்டளை சார்பாக தனது தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகளில் பொதுத்தேர்வு பத்தாம் வகுப்பு எழுதும்மாணவர்கள் சுமார் 4 ஆயிரம் மாணவர்களுக்கு திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், கல்வி உபகரணங்களை வழங்கினார்.இந்நிகழ்வில் முன்னாள் எம்.எல்.ஏ சேகரன், ஒன்றிய கழகச் செயலாளர் கருணாநிதி, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி மற்றும் உயர் கல்வி அலுவலர்களும், தலைமை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.