புகையில்லா போகி கொண்டாட முசிறி நகராட்சி ஆணையர் அறிவுரை

0 247
Stalin trichy visit

 

முசிறி நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து வருகின்றனர். அதில் சேகரமாகும் குப்பைகளை தங்கள் பகுதிக்கு வரும் தூய்மை பணியாளர்களிடம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்க வேண்டும். போகிப் பண்டிகை அன்று குப்பைகளை தீயிட்டுக் கொளுத்தி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் செயல்களில் பொதுமக்கள் ஈடுபடக்கூடாது. வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் சேகரமாகவும் குப்பைகளை பொது இடங்களில் கொட்டாமல் நகராட்சி தள்ளுவண்டி மற்றும் வாகனம் மூலம் தரம் பிரித்து வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை பொது இடங்களில் கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும். எனவே வரும் பொங்கல் பண்டிகையின் போது புகையில்லா போகி கொண்டாடி சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறு நகராட்சி சார்பில் ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.