போகி பண்டிகையன்று குப்பைகளை தீயிட்டு கொளுத்த வேண்டாம்

0 282
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் வசிக்கும் பொது மக்கள் போகிப் பண்டிகையை முன்னிட்டு வீடுகளிலோ, பொது இடங்களிலோ குப்பைகளை எரிக்கக் கூடாது.குப்பைகளை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் நெகிழியின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதற்கான முயற்சிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் தேவையற்ற குப்பைகளை பேரூராட்சியின் துப்புரவு பணியாளர்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும். பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளின் தூய்மைக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் காட்டுப்புத்தூர் பேரூராட்சி மக்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல்அமீது கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.