வடமாநில இளைஞர்களை தாக்கிய மர்ம கும்பல்…
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கண்ணனூரில் சிவன் கோவில் அருகில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த வட மாநில இளைஞர்கள் ஆறு பேர் அறை எடுத்து கூலி வேலை செய்து வருகின்றனர்
வட மாநில இளைஞர்கள் வேலைக்கு செல்லாமல் ஓய்வெடுத்த நிலையில் திடீரென அவர்களது அறைக்குள் புகுந்த சுமார் 9 பேர் கொண்ட மர்ம நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த வட மாநில இளைஞர்களை கட்டையாலும் ஆயுதங்களாலும் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இதில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுனில் ( 36 )நரேஷ் ( 32 ) ராகுல் ( 23 ) ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மீதமுள்ள வர்துன்னா ( 24 ) ராஜேஷ் ( 29 ) மலேஷ் ( 18 ) ஆகிய 6 பேர் மீது மர்ம நபர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தினா. துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்குண்டான இளைஞர்களில் ஒருவர் கூறும் போது நாங்கள் அனைவரும் ஏழை கூலி தொழிலாளர்கள், நாங்கள் இங்கு எங்களது குடும்பத்தை பிரிந்து தமிழ்நாட்டில் எங்களுக்கு வேலை நிரந்தரமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழக முதல்வரை நம்பித்தான் நாங்கள் இங்கு வந்து வேலை செய்து வருகிறோம். இந்த நிலையில் விஸ்வகர்மா தினம் என்பதால் நாங்கள் வழிபாடு நடத்திவிட்டு வேலைக்கு செல்லாமல் எங்களது அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தோம், எங்களுடன் இருந்த அனைவரும் தூக்கத்தில் இருந்தனர். இந்நிலையில் மதியம் 3 மணி அளவில் திடீரென எங்களது அறைக்குள் 9 பேர் கொண்ட மர்ம நபர்கள் கையில் கட்டை இரும்பு போன்ற ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்து இங்கு உங்களுக்கு என்னடா வேலை எல்லாரும் உங்கள் ஊருக்கு ஓடுங்கடா என கொடூரமாக தூங்கிக் கொண்டிருந்தவர்களின் தலையிலும் , உடம்பிலும் தாக்குதலை நடத்தினர். இதில் மூன்று பேருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட நின்றனர். உடனடியாக இது பற்றி ஜம்புனாதபுரம் போலீசார் தகவல் தெரிந்து எங்களது இடத்திற்கு வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் எங்களை துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த 3 இளைஞர்களுக்கு தையல் போடப்பட்டுள்ளது.மேலும் எங்களுக்கு தமிழ்நாட்டில் மீண்டும் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது தமிழக முதல்வரை நம்பித்தான் நாங்கள் இங்கு வந்து கூலி வேலை செய்து வருகிறோம் தொடர்ந்து எங்களை தாக்குதல் நடத்தினால் நாங்கள் மீண்டும் ஊருக்கே செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதை வேதனையுடன்தெரிவிப்பதாக பாதிக்கப்பட்ட வட மாநில இளைஞர்கள் இந்தி கலந்த தமிழில் தெரிவித்தனர்.