கூட்ட நெரிசலில் 9 1/2 ஒன்பதரை பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்…
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ளது அருள்மிகு உத்தமர் கோயில். இந்த கோயிலில் வைகாசி தேரோட்ட திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்நிலையில் தேர் திருவிழா காண வந்த நம்பர் 1 டோல்கேட் திருவள்ளுவர் நகர் சீனிவாசா கார்டனைச் சேர்ந்த பெரியசாமி மனைவி 62 வயது ஜெயலட்சுமி என்பவரிடம் 8 பவுன் தாலி செயினையும், பிச்சாண்டார் கோயில் நடு கள்ளர் தெருவைச் சேர்ந்த 70 வயதான ஸ்ரீமதி என்பவரிடம் 1 1/2 பவுன் செயின் என 9 1/2 பவுன் நகைகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் இருவரும் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.