இளைஞரை வெட்டி படுகொலை செய்த மர்ம நபர்கள்..?

0 474
Stalin trichy visit

திருச்சி மேலஅம்பிகாபுரம், ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் ரிஷி (19),
த/பெ ரமேஷ். ரிஷி அதே பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து
வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அவர் மேலகல்கண்டார் கோட்டை சுடுகாடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர்
அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் ரிஷியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் யார்? எதற்காக இந்த கொலையை செய்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.