ஆசிரியையிடம் தங்கச்சங்கலியை பறித்த மர்ம நபர்கள்..

0 316
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருச்சி துறையூர் சாலையில் உள்ள கொராலிக்கொட்டம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஆசிரியையிடம் அடையாளம் தெரியாத இரண்டு வாலிபர்கள் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.

மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் குமரகுடி நவநீதா குமரன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவருடைய மனைவி 40 வயதான ராதா. இவர் காளவாய் பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று மதியம் மணச்சநல்லூரிலிருந்து திருவெள்ளறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி துறையூர் ரோட்டில் உள்ள கொராலி கொட்டம் பஸ் ஸ்டாப் அருகே தனது மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாதா இரண்டு வாலிபர்கள் ஆசிரியை கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு சென்றனர்.

இது குறித்து ஆசிரியை ராதா மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.