நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி-கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடிக்க வைத்து அழிப்பு.

0 321
Stalin trichy visit

திருச்சி மாவட்டம, சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் அருகே அகிலாண்டபுரத்தில் கடந்த மாதம் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டை போலீசார் வெடிக்க வைத்து அழித்தனர்.

நம்பர் ஒன் டோல்கேட் அருகே அகிலாண்டபுரத்தில் கடந்த மாதம் காரில் சென்றுகொண்டிருந்த தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் திலீபனை காழ்ப்புணர்ச்சி காரணமாக வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் என்ற மற்றொரு சங்கத்தை சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் காரின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முயன்றது.

இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு இச்சம்பவம் தொடர்பாக 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு நாட்டு வெடிகுண்டை கைப்பற்றி பாதுகாப்பான இடத்தில் வைத்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்ட ஜூடிசியல் மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் சமயபுரம் போலீசார் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டை எடுத்து சென்று வெடிக்கவைத்து அழித்தனர்.

முன்னதாக வெடிகுண்டு நிபுணர் எட்வேர்டு தலைமையிலான போலீசார் ஆள்நடமாட்டம் மற்றும் விலங்கு போன்ற உயிரினங்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்து சென்று ஆய்வு செய்தனர். பின்னர் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறை மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு ஆள்நடமாட்டம் இல்லாததை உறுதி செய்ததை தொடர்ந்து நாட்டு வெடிகுண்டு வெடிக்க வைத்து அழிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.