வீட்டில் நிறுத்தியிருந்த பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்கள்

0 205
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 7  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சி ராஜகோபால் நகரில் வீட்டில் நிறுத்தியிருந்த மோட்டார் பைக்கை திருடிச்சென்ற மர்ம நபர்கள்.

திருச்சி குழுமணியை  சேர்ந்தவர் சதீஷ்குமார் (30). இவர் தற்போது பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள ராஜகோபால் நகர் முதலாவது குறுக்கு தெருவில் வசித்து வருகிறார். கடந்த 5 ம் தேதி இரவு 11 மணியளவில் தனது ராயல் என்பில்டு மோட்டார் பைக்கை வீட்டில் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார். பின்னர் 6 ம் தேதி காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் பைக் மாயமாகி இருந்தது. மர்ம நபர்கள் மோட்டார் பைக்கை திருடிச் சென்றனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமார் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மோட்டார் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை  தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.