மாவட்ட விளையாட்டு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

0 14
Stalin trichy visit

திருச்சி, ஆக. 24 திருச்சி அண்ணா விளையாட்டு மைதானம் பகுதியை சேர்ந்தவர் ஞானசுகந்தி.இவர் மாவட்ட விளையாட்டு அதிகாரியாக உள்ளார்.அங்குள்ள உடற்பயிற்சிகூடத்திற்கு அதே பகுதியை சேர்ந்த பாபு(64) என்பவர் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி வந்தபோது, அவரை அனுமதிக்க ஞானசுகந்தி மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பாபு, ஞானசுகந்தியை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல்    திருச்சி கே.சாத்தனூர் கலிங்கநகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 47). இவர் தனது நண்பரான கே.கே.நகர் பகுதியை சேர்ந்த பழனிவேல் என்ற பாபுவிடம்(53) கடனாக ரூ.36 லட்சம் வாங்கியுள்ளார்.சம்பவத்தன்று பழனிவேல் வீட்டிற்கு சென்ற பிரகாஷ் பணத்தை திருப்பி தருமாறு கேட்டபோது, ஆத்திரமடைந்த பழனிவேல், பிரகாசை தகாத வார்த்தையால் திட்டி தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிவேலை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.