புதிய அங்கன்வாடி மையம் : எம்.எல்.ஏ. கதிரவன் திறந்து வைத்தார்
திருச்சி, டிச. 2 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வேங்கை மண்டலம் ஊராட்சியில் உள்ள கீழக்கண்ணுக் குளத்தில் ரூ.11.65 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை எம்எல்ஏ கதிரவன் இன்று திறந்து வைத்தார்.
முசிறி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேங்கை மண்டலம் ஊராட்சியில் உள்ள கீழக்கரணை குளம் கிராமத்தில் 2021- 22 ஆம் ஆண்டுக்கான மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 11.65 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இந்த அங்கன்வாடி மையத்தை இன்று எம்எல்ஏ கதிரவன் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். இதனைத் தொடர்ந்து புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை குழந்தைகளின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வேங்கை மண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசெல்வன், துணைத் தலைவர் வெங்கட்ராமன் ஊராட்சி செயலாளர் நதியா மற்றும் வார்டு உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள்,அரசு அலுவலர்கள்,அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.