புதிதாக கட்டப்பட்ட கழிப்பறைகள்: துறையூர் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
திருச்சி, பிப்.12 திருச்சி மாவட்டம், துறையூர் நகரத்தின் 13-வது வார்டு பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று துறையூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின் குமார் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை ரூபாய் 20-லட்சம் மதிப்பீட்டில் புதிதாத கட்டப்பட்ட கழிப்பறையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இவ்விழாவில் தி.மு.கழக நகர செயலாளர், நகர்மன்ற தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட பிரதிநிதிகள், வார்டு செயலாளர்கள், வார்டு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், நகராட்சி ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.