தமிழ்நாடு வண்ணார் பேரவையின் நிர்வாகிகள் கூட்டம்

0 257
Stalin trichy visit

திருச்சி மார்ச் 31 தமிழ்நாடு வண்ணார் பேரவையின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சங்கர் தலைமையில் திருச்சி மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட தலைவர் பச்சமுத்து வரவேற்று பேசினார்.
பேரவையின் நிறுவனத் தலைவர் மணிபாபா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கடந்த 15 ஆண்டுகால சங்க செயல்பாடுகள் குறித்தும், வருகிறமே 25ந் தேதி அன்று கோவையில் நடைபெறும் மூன்றாவது மாநில மாநாட்டின் நோக்கம் குறித்தும் திருச்சி மாவட்ட புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற விவாதத்தின் முடிவில் திருச்சி மாவட்ட தலைவராக ரவிக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் கணேஷ்குமார், மாவட்ட பொருளாளராக மோகன், மாவட்டத் துணைத் தலைவர்களாக மகேஷ், பால் பண்ணை ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர்களாக கேகே நகர் இரவிச்சந்திரன், சரவணக்குமார், பிராட்டியூர் இராஜேந்திரன், சேட்டு காலனி ஆறுமுகம் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் கோவையில் நடைபெறும் கோரிக்கை மாநாட்டில் திரளாக பங்கேற்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பேரவையின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் புரட்சிக்குமார் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.